கவனக்குறைவால் பலியான இளம் தாய்..! ரயிலில் மோதி 2 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு – இலங்கையில் சோகம்

கவனக்குறைவால் பலியான இளம் தாய்..! ரயிலில் மோதி 2 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு – இலங்கையில் சோகம்

மனதை உலுக்கும் சோகம்..!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி, 29 வயதுடைய இளம் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் அனுராதபுரம் – சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண், 2 பிள்ளைகளின் தாய் என்றும், சுயதொழில் செய்து குடும்பத்தை கவனித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
அவர் அனுராதபுரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு “ஐஸ் பக்கெட்” விற்பனை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அதிவேகமாக வந்த சொகுசு ரயிலை கவனிக்காமல் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகளோ, காவலர்களோ இல்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

“பிள்ளைகளுக்காக உழைத்த தாய் இன்று உயிரற்ற உடலாக வீட்டிற்கு திரும்பியுள்ளார்” என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ரயில் கடவைகளை கடக்கும் போது எப்போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்.
ஒரு நிமிட அலட்சியம்… ஒரு குடும்பத்தின் வாழ்நாளையே மாற்றிவிடும்..!

Post a Comment

Previous Post Next Post