43 ஆண்டுகாளமாக பணத்தை சிறுக சிறுக சேமித்து ஹஜ்ஜை நிறைவேற்றிய முதியவர் மக்காவிலேயே மரணம்..!
இணையத்தில் மீண்டும் வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் பலருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது…
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு முதியவர், புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரே ஆசையோடு சுமார் 43 ஆண்டுகளாக சிறுகச் சிறுகப் பணம் சேமித்து வந்துள்ளார்.
அவருடைய வாழ்க்கை மிகவும் எளிமையானது. பெரிய வசதிகளோ செல்வங்களோ எதுவும் இல்லை. இருந்தாலும் “ஒருநாள் அல்லாஹ்வின் இல்லத்தை பார்க்க வேண்டும்” என்ற ஆசையை மட்டும் அவர் விடவில்லை.
காலங்கள் கடந்து போயின…
வயதும் அதிகரித்தது…
உடல் பலவீனமடைந்தது…
ஆனால் ஹஜ் செல்ல வேண்டும் என்ற கனவு மட்டும் குறையவே இல்லை…
தன்னிடம் இருந்த சிறிய நிலத்தையும் நண்பர் ஒருவருக்கு விற்றுள்ளார். அதற்கு பிறகும் அதே நிலத்தில் கூலித்தொழிலாளியாகவே வேலை செய்து தனது ஹஜ் செலவுக்கான பணத்தை சேமித்துள்ளார் என்பதே இந்தக் கதையின் மிகப்பெரிய உணர்ச்சியான பகுதி…
இறுதியாக அல்லாஹ் அவருடைய நீண்ட நாள் துஆவை ஏற்றுக்கொண்டான்…
அந்த முதியவர் மக்கா நகரை அடைந்தார்…
இஹ்ராம் உடை அணிந்தார்…
ஹஜ்ஜின் புனித நிலத்தில் காலடி வைத்தார்…
ஆனால்…
அல்லாஹ் அவருக்காக எழுதியிருந்த இறுதி நேரமும் அங்கேயே வந்தது.
இஹ்ராம் அணிந்த நிலையிலேயே அவர் வலதுபுறமாக சாய்ந்து படுத்திருந்தபோது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு பலரை சிந்திக்க வைத்தது.
இந்தச் செய்தி முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி வைரலானது. தற்போது மீண்டும் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அவர் உண்மையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும், அவரது பெயர் மற்றும் குடும்ப விவரங்கள் முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை சொல்லுகிறது…
இந்த உலகத்தில் மனிதன் எவ்வளவு திட்டமிட்டாலும், இறுதி முடிவு அல்லாஹ்விடம்தான் இருக்கிறது.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைக்கும்.”
(ஸூரத்து ஆல் இம்ரான் : 185)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்து விடும்.”
(ஸூரத்துன் நிஸா : 78)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
“ஒருவன் எந்த நிலையில் மரணிக்கிறானோ, அதே நிலையில் மறுமை நாளில் எழுப்பப்படுவான்.”
(ஸஹீஹ் முஸ்லிம்)
இதைக் கேட்டவுடன் பல முஃமின்களின் மனதிலும் ஒரே எண்ணம்தான் வரும்…
“நாமும் அல்லாஹ்வின் பொருத்தத்தோடு நல்ல நிலையில் மரணிக்க வேண்டும்…”
உண்மையிலேயே, உலக வாழ்க்கை தற்காலிகம்.
பணம்,பதவி,புகழ் எதுவும் நம்மோடு வரப்போவதில்லை. ஆனால், ஒரு நல்ல நிய்யத்,ஒரு உண்மையான துஆ,ஒரு sincere ஆன அல்லாஹ்வின் மீது வைத்த நம்பிக்கை இவைகள்தான் மனிதனை உயர்த்துகின்றன.
அல்லாஹ் இந்த சகோதரருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக…
நம்ம அனைவருக்கும் ஈமானோடு நல்ல முடிவை வழங்குவானாக… ஆமீன்


Post a Comment