அஸ்வெசும மே மாத கொடுப்பனவு – மக்கள் வங்கிக்கு பணம் வந்ததா?

அஸ்வெசும மே மாத கொடுப்பனவு 2026 – NSP வங்கிக்கு மட்டும் பணமா? மற்ற வங்கிகளுக்கு எப்போது வரும்?

அஸ்வெசும பயனாளிகள் கவனத்திற்கு..

இன்று 2026 மே மாதம் 15ஆம் திகதி என்பதால், அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பயனாளிகள் பலரும் தங்களது மே மாத கொடுப்பனவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வங்கிகளுக்கு சென்றிருந்தனர்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான வங்கிக் கணக்குகளுக்கு இன்னும் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன் காரணமாக பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

NSP வங்கிக் கணக்குகளுக்கு பணம் வர தொடங்கியது?

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, தேசிய சேமிப்பு வங்கி (NSB) கணக்கு வைத்திருக்கும் சில அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலர் தங்களது மொபைல் தொலைபேசிகளுக்கு SMS வந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே நீங்கள் NSB வங்கி கணக்கு வைத்திருப்பவராக இருந்தால்

  • உங்கள் கணக்கை சரிபார்க்கவும்
  • ATM அல்லது வங்கியின் மூலம் தொகையை பெற்றுக்கொள்ளவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

BOC மற்றும் People’s Bank பயனாளிகள் நிலை என்ன?

தற்போதைய தகவல்களின் படி:

  • மக்கள் வங்கி (People’s Bank)
  • வங்கி ஆஃப் சிலோன் (BOC) 
  • ஏனைய சில வங்கிகள்

இவற்றுக்கு இன்னும் மே மாத அஸ்வெசும கொடுப்பனவு முழுமையாக வரவு வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இன்று மாலை அல்லது இரவு நேரத்திற்குள் ஏனைய வங்கிகளுக்கும் பணம் வர வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பணம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

அஸ்வெசும பயனாளிகள்:

  • பதற்றப்பட தேவையில்லை
  • இன்று மாலை வரை காத்திருக்கவும்
  • உங்கள் வங்கி SMS மற்றும் balance சரிபார்க்கவும்
  • GN / DS அலுவலக அறிவிப்புகளையும் கவனிக்கவும் என்று கூறப்படுகிறது.

அஸ்வெசும திட்டம் தொடர்பான முக்கிய தகவல்

அஸ்வெசும திட்டம் தற்போது இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் முக்கிய நலன்புரித் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ்:

  • முதலாம் கட்டம்
  • இரண்டாம் கட்டம்
  • பாதிப்புக்குள்ளான குடும்பங்கள்
  • வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள்

போன்ற பிரிவுகளுக்கு மாதாந்திர உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மற்ற வங்கிகளுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டால், அதற்கான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அஸ்வெசும பயனாளிகள் தொடர்ந்து தங்களது வங்கி கணக்குகளை சரிபார்த்து வருவது நல்லது.

Post a Comment

Previous Post Next Post