இளைஞர் யுவதிகளுக்கான 1,50000 ரூபாய் அரசாங்கத்தினுடைய நிதி உதவி தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இலங்கை அரசாங்கம், விசேடமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'Next Sri Lanka' எனப்படுகின்ற ஒரு புராஜெக்ட் (செயற்திட்டத்தின்) மூலமாக, இந்த அஸ்வெசும பெறக்கூடிய குடும்பங்களில் இருக்கக்கூடிய இளைஞர் யுவதிகள், அதேபோல குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருக்கக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பை வழங்கும் முகமாக அவர்களுக்கான பயிற்சி நெறிகளை வழங்குகின்ற நோக்கத்தில் தான் இந்த தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்கீழ் செயல்படுத்தப்படுகின்ற இந்த திட்டத்தின் மூலமாக எதிர்வரும் 2029 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 12 லட்சம் அஸ்வெசும பயனாளிகளாக இருக்கக்கூடிய குடும்பங்களை வலுவூட்டுகின்ற நோக்கத்தோடுதான் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படக்கூடிய இரண்டு பிரதானமான விடயங்கள் என்னவென்று சொன்னால், இந்த இளைஞர் யுவதிகளுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், அதேபோல உள்ூரில் சுய தொழில் முயற்சிகள் சார்ந்த விடயத்தில் அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களை முன்னேற்றும் முகமாகவும் தான் இந்த Next Sri Lanka திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் ஹோட்டல், நிர்மானம், தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு சேவை துறைகளுக்கான தொழில் பயிற்சியை வழங்கும் முகமாகத்தான் இந்த 1,50,000 ரூபாய் நிதி என்பது உங்களுக்காக வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 1500 இளைஞர்களை உள்வாங்கப்பட்டு, அவர்களுக்கான இந்த ஹோட்டல் துறைகள் சார்ந்து இலவச பயிற்சி நெறிகளும் உங்களுக்கு வழங்கப்படவிருக்கின்றது.
எனவே உங்களுடைய திறமைகள், தகுதிகளுக்கு ஏற்ற வகையில் மேற்படி நான் குறிப்பிட்டிருக்கக்கூடிய இந்த துறைகள் சார்ந்து உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய துறைகளில் நீங்கள் விண்ணப்பித்து, அதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான விடயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதலாவதுகமெண்ட்பகுதியில் கொடுக்ப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு செல்வதன் மூலமாக நீங்கள் இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். அல்லது உங்களுக்கு இந்த இணையத்தளம் மூலமான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால், உங்களுடைய பகுதிகளில், உங்களுடைய பிரதேசங்களில் இருக்கக்கூடிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை நாடுவதன் மூலமாக நேரடியாகவே நீங்கள் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதான அறிவித்தலும் விடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே இளைஞர் யுவதிகள், விசேடமாக இந்த அஸ்வெசும கொடுப்பனவைப் பெறக்கூடிய மிகவும் வறுமையான, கஷ்டப்படக்கூடிய குடும்பங்கள், அதேபோல குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பங்களில் இருக்கக்கூடிய இளைஞர் யுவதிகள், நீங்கள் உங்களுடைய கல்வி நடவடிக்கைகளை முடித்துவிட்டு அடுத்த தொழில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பில் இருக்கின்றீர்கள் என்று சொன்னால், இந்த விடயத்திற்கு கட்டாயமாக அப்ளை செய்யுங்கள்.
ஏதோ ஒரு வகையில் உங்களுடைய நல்ல திறமைகளை நீங்கள் வெளிப்படுத்துகின்ற போது, வெளிநாடுகளில் சென்று வேலைபுரிவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படும். அல்லது உள்நாட்டிலேயே நீங்கள் தொழில்களைப் புரிவதற்கான உங்களுக்கான திறமை வலுவூட்டல் மேம்படுத்தப்படுவதோடு, இந்த நிதி உதவியையும் சிறப்பாக அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்படவிருக்கின்றது.
எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிடாமல், முடிந்தளவு உங்களுடைய சமூக ஊடகங்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

Post a Comment