அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிகளில்
அஸ்வெசும சலுகைகளைப் பெறும் முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு நாளை (30)அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று நலன்புரி சலுகைகள் சபை தெரிவித்துள்ளது. நாளை முதல் பயனாளிகள் தங்கள் நிதியை நியமிக்கப்பட்ட கணக்குகள் மூலம் அணுக முடியும் என்று சபைத் தலைவர் ஜெயந்த வீரரத்ன தெரிவித்தார்.
நாடு முழுவதும் தகுதியுள்ள 600,768 பயனாளிகள் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ 3,003 மில்லியனுக்கும் (ரூ. 3,003, 840,000) அதிகமாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் மற்றும் பாதிக்கப்பட்டக் கூடிய குடும்பங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கான முதிய குடிமக்களுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது.
Post a Comment