Information released regarding the Ashwesuma allowance

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் 

முன்னாள் எம்பிகளுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதிய கொடுப்பனவு நிச்சயம் ரத்துச் செய்யப்படும். ஓய்வூதியத்தை ரத்துச் செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமம் எனின், அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனைப் பெற்றுக்கொடுக்க நடடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அரசியல்வாதிகளின் சுமை மக்கள் தோள்களில் சுமத்தப்படுவது நியாயமற்றது என்றும், எம்பிக்களின் ஓய்வூதியம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் எனறும் அமைச்சர் கூறியுள்ளார். 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தனது கட்சி தெரிவித்திருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், ஓய்வூதியம் ரத்துச் செய்யப்படுவதால் எந்த எம்பியும் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்கள் வாழ முடியாவிட்டால் அவர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post