Saudi Arabia executes 8 people for drug trafficking

சவுதி அரேபியவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் 


சவுதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அந் நாட்டு செய்தி நிறுவனம் வெளியுட்டுள்ள அறிக்கையின்படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்குப் பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோபியர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகன் ஒருவருக்கு, தனது தாயை கொலை செய்த குற்றத்திகாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

2025ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியவில் இதுவரை  230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதில் 154 பேர் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர்.  2022ம் ஆண்டு 19 பேருக்கும், 2023ம் ஆண்டு 2 பேருக்கும்,2024ம் ஆண்டு 117 பேருக்கு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 

முன்னதாக சவுதி அரேபியா கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post