குர்ஆனை எரித்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி… இறுதியில் கலிமா சொன்னாரா?

வீடியோவில் குர்ஆனை எரித்த அமெரிக்க பெண்..! பிறகு தூங்கும் போது இறைவன் அவருக்கு கொடுத்த பதறவைக்கும் தண்டனை..!

இன்றைய சமூக வலைதள காலத்தில் views, likes, followers கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலர் எதையும் செய்ய தயங்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் மனிதன் செய்யும் ஒரு செயல் அவனுடைய வாழ்க்கையையே முழுமையாக மாற்றி விடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது இணையத்தில் மீண்டும் பேசப்பட்டு வருகிறது…

அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் ரெபெக்கா என்ற ஒரு பெண் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். உயர்கல்வி முடித்திருந்த இவர் YouTube, Instagram போன்ற வலைதளங்களில் live videos செய்து followers சேர்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய videos-ல மக்கள் comment-ல என்ன challenge கொடுக்கிறார்களோ அதை live-ஆ செய்து காட்டுவதே இவருடைய content ஆக இருந்தது.

ஒருநாள்…

இஸ்லாத்தை வெறுக்கும் ஒருவன் comment-ல் ஒரு விஷயத்தை எழுதுகிறான்.

“முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானது குர்ஆன்… தைரியம் இருந்தால் அதைப் பற்றி ஏதாவது செய்து காட்டு…” என்று.

அந்த பெண்ணுக்கும் சிறு வயதிலிருந்தே இஸ்லாமைப் பற்றி தவறான எண்ணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த comment-ஐ challenge ஆக எடுத்துக்கொண்டார்.

புதியதாக ஒரு குர்ஆன் வாங்கி வந்து live video ஆரம்பித்தார்…

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்…

அந்த நேரத்தில் அவர் செய்த செயல் பல முஸ்லிம்களின் மனதையும் உடைத்தது.

  • அவர் குர்ஆனை அவமதித்தார்…
  • அதை கிழித்தார்…
  • இறுதியில் நெருப்பில் எரிக்க முயன்றார்…

அஸ்தக்பிருல்லாஹ்… 😢

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. சிலர் அவரை திட்டினார்கள். ஆனால் பல முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

“அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் கொடுக்க வேண்டும்…”

“அல்லாஹ் இவரை மன்னிக்க வேண்டும்…”

என்று துஆ செய்தார்கள்.

இதுதான் இஸ்லாம்.

வெறுப்புக்கு பதிலாக கூட நன்மையை விரும்ப சொல்லும் மார்க்கம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:

“நன்மையும் தீமையும் சமமாகாது. நீ தீமையை மிகச் சிறந்த முறையில் தடு.”

(ஸூரத்து புஸ்ஸிலத் : 34)

அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து அந்த பெண்ணின் வாழ்க்கையில் ஒரு அதிர்ச்சி மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு இரவில் தூக்கம் வரவில்லை,  மூன்று நாட்கள் தொடர்ந்து விசித்திரமான அனுபவங்கள்.

  • குர்ஆன் ஓதப்படும் சப்தம் கேட்பது போல…
  • அமைதியில்லாத மனநிலை…
  • கனவுகளில் குர்ஆன்..

இப்படி பல விஷயங்கள் நடந்ததாக அவர் பின்னர் கூறியதாக இணையத்தில் பகிரப்பட்டது.

மூன்றாவது நாள் அவர் live video ஒன்றை வெளியிட்டார்.

அதில் அழுதுகொண்டே:

“நான் தவறு செய்துவிட்டேன்…”

“என்னை மன்னியுங்கள்…”

“அல்லாஹ் எனக்கு நேரான பாதையை காட்ட வேண்டும்…”

என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

பின்னர் தனது social media accounts அனைத்தையும் delete செய்து, ஒரு மஸ்ஜிதுக்கு சென்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக இந்தக் கதை சமூக வலைதளங்களில் பரவியது.

உண்மையில் அல்லாஹ்வின் ஹிதாயத் யாருக்கு எப்போது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது…

அல்லாஹ் கூறுகிறான்:

“அல்லாஹ் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுவான்.”

(ஸூரத்துன் நூர் : 46)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

“என் அடியார்களே! நீங்கள் உங்கள்மீது அளவுக்கு மீறி தவறு செய்திருந்தாலும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்.”

(ஸூரத்துஸ் ஸுமர் : 53)

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“ஒருவரின் மூலம் அல்லாஹ் இன்னொருவருக்கு நேர்வழி காட்டுவது, உலகிலுள்ள செல்வங்களை விட சிறந்தது.”

(ஸஹீஹுல் புகாரி)

கண்ணியமானவர்களே…

இந்த உலகத்தில் யாரையும் நிரந்தரமாக வெறுக்க வேண்டாம்.

இன்று இஸ்லாத்தை எதிர்க்கும் ஒருவர்...

நாளை இஸ்லாத்தின் பாதுகாவலராக கூட மாறலாம்.

அல்லாஹ் நமக்கும், வழி தவறி இருப்பவர்களுக்கும் ஹிதாயத் வழங்குவானாக...


Post a Comment

Previous Post Next Post