அபிஷேகாவுக்கு சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு..! கண்கலங்கிய அம்மா..! மயிலாடுதுறையை கலக்கிய சரிகமபா Title Winner..!

அபிஷேகாவுக்கு சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு..! கண்கலங்கிய அம்மா..! மயிலாடுதுறையை கலக்கிய சரிகமபா Title Winner..!


சரிகமப்பா லிட்டில் சாம்ஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான அபிஷேகாவுக்கு அவர்களுடைய சொந்த ஊரில கிடைத்த வரவேற்பு தற்போது இணையதளத்தையே கலக்கிட்டு இருக்கு. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் “இது ஒரு சாதாரண வெற்றி கிடையாது... ஒரு குடும்பத்தோட கனவு நிறைவேறிய தருணம்”ன்னு கமெண்ட் பண்ணிட்டு வராங்க.

சமீபத்துல நடந்த சரிகமப்பா லிட்டில் சாம்ஸ் கிராண்ட் பினாலில அபிஷேகா முதல் பரிசை வென்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசாக பெற்றிருந்தாங்க. இந்த வெற்றிக்குப் பிறகு அவங்க சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் நன்னிலம் பகுதிக்கு திரும்பி சென்றிருக்காங்க. அங்க நடந்த வரவேற்பு விழா யாராலும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமா இருந்ததாம்.

வைரவாகும் வீடியோ 👇👇👇👇

அபிஷேகா கார் ல இருந்து இறங்கிய உடனே வானவேடிக்கை, தப்பு செட், மலர் மாலை, ஆரத்தி, உற்சாக குரல்கள் என்று முழு ஊரும் கொண்டாட்ட மனநிலையில இருந்திருக்குது. ஊர் பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து அபிஷேகாவுக்கு அன்பு மழை பொழிந்திருக்காங்க.

அதிலும் குறிப்பா அபிஷேகாவோட அம்மா ரொம்பவே எமோஷனல் ஆகிட்டாங்க. ஏன்னா மிகுந்த கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த அபிஷேகாவை இந்த அளவுக்கு கொண்டு வர அவங்க அம்மா எடுத்த முயற்சிகள் எல்லாம் இப்ப பலன் கொடுத்த மாதிரி இருந்ததாம். அந்த தருணத்துல அபிஷேகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்திருக்குது.

“நம்ம ஊருக்கு பெருமை சேர்த்திருக்க”... “உன்னை பார்த்து இன்னும் நிறைய குழந்தைகள் சாதிக்க நினைப்பாங்க”... “நீ இன்னும் பெரிய உயரத்துக்கு போகணும்”ன்னு ஊர் மக்கள் வாழ்த்தி பேசின வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் அபிஷேகாவுடன் போட்டோ எடுக்கவும், அவங்க பாட சொல்லியும் ரசிகர்கள் கூட்டம் திரண்டிருந்ததாம். முழுக்க முழுக்க அந்த இடமே ஒரு குடும்ப விழா மாதிரி மாறி இருந்ததாக சொல்லப்படுகிறது.

சரிகமப்பா மேடையில் அபிஷேகா காட்டிய திறமைக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம் இதுதான் என்று ரசிகர்கள் தற்போது இணையதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது அந்த வீடியோவும் போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post