இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நிமிடங்கள்..! அருகில் குடும்பமே இல்லாமல் உயிர் பிரிந்த சோகம்..! திரையுலகை உலுக்கிய தகவல்..!
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..! மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு மனவேதனையில் இருந்த பாரதிராஜா எப்படி உயிரிழந்தார்? குடும்பத்தினர் அருகில் இல்லாத சோக சம்பவம்..! முழு தகவல்கள் இங்கே..!
தமிழ் சினிமாவையே கலங்க வைத்த ஒரு துயர சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது 84வது வயதில் காலமான சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கு. ஆனால் அதைவிட ரசிகர்களை அதிகம் கலங்க வைத்திருப்பது அவருடைய கடைசி நிமிடங்கள் பற்றிய தகவல்தான்.
வைரலாகும் வீடியோ 👇👇👇👇
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா அவர்கள், மகன் மனோஜ் பாரதிராஜா உயிரிழந்ததுக்கு பிறகு முழுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. மகன் மறைவுக்கு பிறகு சரியாக சாப்பிடாமல், தூங்காமல், அதிகமான மன அழுத்தத்திலேயே அவர் வாழ்ந்து வந்ததாக குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து இருக்காங்க.
இதனால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். மாதத்தில் 20 நாட்கள் மருத்துவமனையிலும், மீதமுள்ள நாட்கள் வீட்டிலும் ஓய்வில் இருந்திருக்காரு. கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கு.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு வழக்கம்போல மருந்து கொடுக்கச் சென்றபோது உடல்நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதை பணியாளர்கள் கவனிச்சிருக்காங்க. உடனடியாக மருத்துவர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காங்க. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமா இருக்குது, சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கலைன்னு தெரிவித்திருக்காங்க.
அதிலும் ரசிகர்களை அதிகம் கலங்க வைத்த விஷயம் என்னன்னா, அவர் உயிர் பிரியும் அந்த கடைசி நேரத்தில் மனைவியும் மகளும் அருகில் இல்லையாம். அவர்கள் சொந்த ஊரான தேனியில் இருந்ததாகவும், தகவல் அறிந்ததும் உடனடியாக சென்னை நோக்கி கிளம்பியதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற மனிதர்… எத்தனையோ நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை உருவாக்கிய ஒரு சினிமா பல்கலைக்கழகம்… அந்த மனிதரின் கடைசி நிமிடங்கள் இவ்வளவு தனிமையா இருந்தது ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறது.
“16 வயதினிலே”, “முதல் மரியாதை”, “கருத்தம்மா”, “அலைகள் ஓய்வதில்லை”, “கிழக்கே போகும் ரயில்” போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை கொடுத்த பாரதிராஜா, தமிழ் மண்ணின் வாசனையை உலகத்துக்கு காட்டிய ஒரு புரட்சியாளர் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.
இப்போது அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பாரதிராஜா அவர்கள் உடலால் இல்லாவிட்டாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், கிராமத்து உணர்வுகள், தமிழ் மண்ணின் அழகு — எப்போதும் ரசிகர்களின் மனசுல வாழ்ந்துகிட்டே இருக்கும்.

Post a Comment