சரிகமப்பா சீசன் 5ல் யார் டைட்டில் வின்னர்..? அபிஷேகா, சுமன், தன்வி மோதலில் சூடுபிடிக்கும் கிராண்ட் பினாலே..!
சரிகமப்பா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 5 கிராண்ட் பினாலே நெருங்கும் நிலையில் அபிஷேகா, சுமன், தன்வி உள்ளிட்ட போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
சரிகமப்பா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கிராண்ட் பினாலே நெருங்கும் நிலையில் அபிஷேகா, சுமன், தன்வி உள்ளிட்ட போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் யார் டைட்டில் வின்னராக வரப்போகிறார்கள் என்ற கேள்விக்கு நேரடி பதில் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் வைத்திருந்தது ரசிகர்களை இன்னும் அதிக ஆவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
வீடியோவை பாருங்கள் 👇👇👇👇
இந்த வார ரவுண்டில் போட்டியாளர்களுக்கு ரேண்டமாக பாடல்கள் தேர்வு செய்து பாட வைக்கப்பட்டதாம். அதில் அபிஷேகாவுக்கு கிராமத்து பாடல் கிடைத்தவுடன் அரங்கமே உற்சாகமாக மாறியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே கிராமிய பாடல்களில் தனி ஸ்டைல் வைத்திருக்கும் அபிஷேகா, இந்த ரவுண்டிலும் செம்மையாக பாடி ஜட்ஜஸ்களையே கவர்ந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல் தன்வியிடம் ஜட்ஜஸ், “இந்த முறை கண்டிப்பா கேட்டை தாண்டி உள்ளே போகணும்” என்று ஊக்கப்படுத்தியதாகவும், அதற்கு ஏற்ற மாதிரி அந்த சிறுமியும் சூப்பராக பாடி அசத்தியதாகவும் கூறப்படுகிறது.
சுமனை பற்றி சொல்லவே தேவையில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். எந்த பாடல் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி, மேடையை முழுக்க என்டர்டெயின் பண்ணும் திறமையால் அவர் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
இந்த மூவரும் தற்போது டைட்டில் ரேஸில் முன்னிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த சீசனின் மிகப்பெரிய ஹைலைட் என்னவென்றால், வெற்றியாளருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீடு பரிசாக வழங்கப்பட இருப்பது தான்.
ஆனால் அந்த வீட்டை வென்ற பிறகும் ரெஜிஸ்ட்ரேஷன், வீட்டு வரி, சட்டபூர்வ செலவுகள் போன்றவை லட்சக்கணக்கில் வரலாம் என்பதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனால் “வீடு வெல்வது மட்டும் போதாது, அதை முழுமையாக சொந்தமாக்க இன்னும் பல செலவுகள் இருக்கும்” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்போது சரிகமப்பா ரசிகர்களிடையே ஒரே கேள்வி தான் — இந்த முறை டைட்டிலை அபிஷேகா வெல்லப்போகிறாரா? சுமனா? இல்ல தன்வியா?
இந்த கேள்விக்கான பதில் கிராண்ட் பினாலே மேடையில் தெரிய வர இருக்கிறது.

Post a Comment