சரிகமப வில் சாதனை படைத்து Ticket To Finally க்கு தெரிவான இலங்கை மண்ணின் வர்ஜாவின் வாழ்க்கை வரலாறு..! கண்கலங்க வைத்த வீடியோ..!

சரிகமப்பா டைட்டிலை வெல்ல இலங்கை மக்களின் ஆதரவு தேவை..! வர்ஜாவுக்காக உலக தமிழர்கள் ஒன்றிணைந்த தருணம்..!

சரிகமப்பா லிட்டில் சாம்ஸ் சீசன் 5ல் இலங்கையை சேர்ந்த வர்ஜாவை பைனலுக்கு கொண்டு செல்ல உலக தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மிஸ் கால் வோட்டிங் மூலம் வர்ஜாவை வெற்றிப்பெறச் செய்ய ரசிகர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


சீ தமிழின் பிரம்மாண்ட இசை ரியாலிட்டி ஷோவான சரிகமப்பா லிட்டில் சாம்ஸ் சீசன் 5 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களில் கிராண்ட் பினாலே நடைபெற இருக்கும் நிலையில், இந்த சீசனின் டைட்டிலை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இலங்கையை சேர்ந்த சிறுமி வர்ஜாவுக்காக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்து வருவது தற்போது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

வீடியோவை பாருங்கள் 👇👇👇👇

இலங்கையின் மண்ணிலிருந்து சரிகமப்பா மேடைக்கு வந்த வர்ஜா, தனது இனிமையான குரலாலும் அசத்தலான பெர்பார்மன்ஸ்களாலும் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். ஆரம்ப ஆடிஷனிலிருந்தே வர்ஜா பாடிய ஒவ்வொரு பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்ற பல்வேறு சுற்றுகளில் காதல் பாடல்கள், பழைய மெலோடி பாடல்கள், டூயட் சுற்றுகள் என எல்லா விதமான பாடல்களிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் வர்ஜா.

சமீபத்தில் நடைபெற்ற பழைய பாடல்கள் சுற்றிலும் வர்ஜாவின் பாடலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு நடந்த முக்கியமான தேர்வில் இரண்டாவது பைனலிஸ்டாக அக்ஷத் நிரூபம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது பைனலிஸ்டாக வர்ஜா தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதற்காக சமூக வலைதளங்கள் முழுவதும் வர்ஜாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக WhatsApp மற்றும் மிஸ் கால் வோட்டிங் மூலமாக அதிக அளவில் வாக்குகளை பதிவு செய்ய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

“இலங்கையின் அடுத்த பெருமை வர்ஜாதான்”, “இந்த வாட்டி டைட்டில் இலங்கைக்கு வரணும்” போன்ற ஹாஷ்டாக்களும் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கடந்த சீசன்களில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா மற்றும் சபேசன் ரசிகர்களின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தனர். அதேபோல் இந்த முறை வர்ஜாவும் டைட்டிலை வென்று இலங்கைக்கு பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்த சீசனின் வெற்றியாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட இருப்பதும் போட்டியின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

இப்போது சமூக வலைதளங்களில் இருந்து யூடியூப் வரை எங்க பார்த்தாலும் “வர்ஜாவை பைனலுக்கு கொண்டு போங்க” என்ற ஆதரவு குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது.

கிராண்ட் பினாலே மேடையில் வர்ஜா பாடுவாரா? இலங்கைக்கு மீண்டும் ஒரு பெருமையை தேடி தருவாரா? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post