சினிமாவில் பாடப்போகும் அபிஷேகா தலையெழுத்தை மாற்றிய பாடல்...! மேடையில் கண்கலங்கிய அபிஷேகா அம்மா..!

 

சரிகமப்பா அபிஷேகாவுக்கு அடிச்ச ஜாக்பாட்.. கிராண்ட் பினாலேல காத்திருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!

சரிகமப்பா லிட்டில் சாம்பியன் சீசன் 5 போட்டியாளர் அபிஷேகாவுக்கு பெரிய சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராண்ட் பினாலே மேடையிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா? முழு விவரம் இங்கே!

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வது எல்லாராலும் முடியாத விஷயம். ஆனா அந்த லிஸ்ட்ல இப்ப சேரப் போறாங்க சரிகமப்பா லிட்டில் சாம்பியன் சீசன் 5 போட்டியாளர் அபிஷேகா!

இத்தனை நாளா தன்னோட கிராமிய குரலாலும், கருப்பசாமி பாடல்களாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட அபிஷேகாவுக்கு இப்போ பெரிய ஜாக்பாட் அடிச்சிருக்கு என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட். அதாவது கூடிய சீக்கிரமே சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாக இருக்கிறாராம்.

வீடியோவை பாருங்கள் 👇👇👇👇👇

அதுவும் சாதாரண வாய்ப்பு இல்ல. ஒரு புதிய படத்தில் குழந்தை நட்சத்திரத்துக்கான குரலுக்கு அபிஷேகாவை தேர்வு செய்திருக்காங்கன்னு சொல்லப்படுகிறது. இதற்கான ஆரம்ப ஒப்பந்த பேச்சுவார்த்தைகளும் நடந்து முடிஞ்சிருக்கு என்பதும் தகவல்.

அபிஷேகாவை ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் கவனிக்க வைத்தது அவரோட கிராமிய பாடல்கள் தான். குறிப்பா கருப்பசாமி பாடல்கள் பாடும்போது அபிஷேகா காட்டுற அந்த உணர்ச்சி, குரல், நாட்டுப்புற ஸ்டைல் எல்லாமே ரசிகர்களை வேற லெவலுக்கு கொண்டு போயிருச்சு.

அதுலயும் ஒரு குறிப்பிட்ட கருப்பசாமி பாடல் தான் இப்போ அபிஷேகாவோட வாழ்க்கையை திருப்பி போடப் போகுது என்பதுதான் பெரிய ஹைலைட். அந்த பாடலை பார்த்து ஒரு டிவோஷனல் ஆல்பம் வாய்ப்பும் அவரை தேடி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு இந்த விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறதாம். ஜூன் 7ம் தேதி நடக்க இருக்கும் கிராண்ட் பினாலே மேடையிலேயே அபிஷேகாவுக்கு அதிகாரப்பூர்வமாக இந்த வாய்ப்பை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதுவும் டைட்டில் ஜெயிச்சாலும் சரி, ஜெயிக்கலனாலும் சரி… இந்த சினிமா வாய்ப்பு அபிஷேகாவுக்கு உறுதி என்பதுதான் ரசிகர்களை இன்னும் அதிக உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கு.

கடந்த சீசனில் செந்தமிழனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்த மாதிரி, இந்த முறை அபிஷேகாவுக்கு நேரடியாக சினிமா உலக கதவு திறக்கப் போகுது போல தெரிகிறது.

ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளருக்கு டைட்டில் மட்டும்தான் வெற்றி கிடையாது. அந்த ஷோ முடிந்த பிறகும் யாருக்கு என்ன வாய்ப்பு கிடைக்குது என்பதுதான் உண்மையான வெற்றி. அந்த வகையில் அபிஷேகா இப்பவே தன்னோட அடுத்த கட்டத்தை செட் பண்ணிட்டாங்கன்னு ரசிகர்கள் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

இப்போ சமூக வலைதளங்களிலும் அபிஷேகா ரசிகர்கள் இந்த செய்தியை வைரலாக்கிட்டு இருக்காங்க. கிராண்ட் பினாலே மேடையில் என்ன சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று எல்லாரும் ஆவலோடு காத்திருக்கிறாங்க.

Post a Comment

Previous Post Next Post