சரிகமப்பா லிட்டில் சாம்பியன்ஸ் 5 டைட்டில் வின்னருக்கு ரூ.1 கோடி வீடா? அபிஷேகாவுக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்பு!
சரிகமப்பா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 5 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கிராண்ட் பினாலே நெருங்கும் நிலையில் டாப் 4 பைனலிஸ்ட்களும் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டிருக்காங்க. அதுல ரசிகர்களின் கவனத்தை அதிகமா ஈர்த்து வர்ற போட்டியாளர் அபிஷேகாவும் இடம்பிடிச்சிருக்காங்க.
அபிஷேகாவோட பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே சமூக வலைதளங்களில் “இந்த வாட்டி டைட்டில் அபிஷேகாவுக்குத்தான்”ன்னு ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. அபிஷேகாவோட கிராமிய குரலும், எமோஷனல் பெர்பார்மன்ஸும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கு.
கண்கலங்க வைத்த வீடியோ கட்டாயம் பாருங்கள் 👇👇👇
இந்த சீசன்ல முக்கிய ஹைலைட்டா பேசப்படுற விஷயம் என்னன்னா, வின்னருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பரிசு தான். வழக்கமா சிங்கிங் ரியாலிட்டி ஷோக்களில் 25 லட்சம், 50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் கொடுப்பாங்க. ஆனா இந்த முறை அதையும் தாண்டி சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட இருக்கிறது என்பதுதான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கு.
டபுள் பெட்ரூம், மாடர்ன் கிச்சன், பெரிய ஹால் என அனைத்து வசதிகளோடும் இருக்கும் இந்த வீடு பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமா பேச ஆரம்பிச்சிட்டாங்க.
ஆனா இந்த வீட்டை வெல்லுறதுக்கு அப்புறமும் ஒரு முக்கிய விஷயம் இருக்கு. அதாவது வீட்டு ரெஜிஸ்ட்ரேஷன், ஸ்டாம்ப் டியூட்டி போன்ற செலவுகள் தனியாக லட்சக்கணக்கில் வருமாம். இதை வெற்றியாளர் தரப்பிலிருந்துதான் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதும் தற்போது பேசுபொருளாகி இருக்கு.
இந்நிலையில் அபிஷேகாவுக்கு ஜட்ஜஸ்கள் கொடுத்த மோட்டிவேஷன் வார்த்தைகளும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. “கடந்த சில வாரங்களா நீ சரியா பெர்பார்ம் பண்ணல, எமோஷனலாக இருந்த. ஆனா பைனல்ஸ்ல உன்னோட முழு டேலன்ட்டையும் காட்டி தட்டி தூக்கு. இந்த வீட்டுக்கு நீ டிசர்வ் ஆன ஆள்”ன்னு ஜட்ஜஸ் ஊக்கப்படுத்தியிருக்காங்கன்னு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல போட்டியாளர் சுமனுக்கும் ஜட்ஜஸ் தன்னம்பிக்கை கொடுத்து பேசினதாக கூறப்படுகிறது. “எதையும் யோசிக்காம ஜாலியா பாடு, உனக்கு வாய்ப்பு கண்டிப்பா இருக்கு”ன்னு சொல்லியிருக்காங்க.
ஒவ்வொரு சீசன்லயும் ரசிகர்களின் மனசை கவர்ந்த ஒருத்தர் டைட்டில் வின்னரா மாறுவாங்க. அந்த வகையில் இந்த முறை அபிஷேகா வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கிறது.
இப்போதே சமூக வலைதளங்களில் “அபிஷேகாதான் இந்த வாட்டி டைட்டில் வின்னர்”ன்னு ரசிகர்கள் டிரெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கிராண்ட் பினாலே மேடையில் என்ன நடக்கப் போகுது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்காங்க.

Post a Comment