வருமானம் கம்மியா இருந்தா அஸ்வெசும கிடைச்சுடும் அப்படின்னு நீங்க நினைச்சா, அதுதான் முதல்ல நாம பண்ற பெரிய தப்பு பழைய சமுர்த்தி முறை மாதிரி வெறும் வருமானத்தை மட்டும் வச்சு இப்போ அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.
அதற்குப் பதிலாக பல்வகை இழப்புப் புள்ளி என்ற புதிய நுட்பமான முறைமை மூலம்தான் தகுதியைத் தீர்மானிக்கிறார்கள்.
இந்த முறைமையின் கீழ் உங்கள் குடும்பத்தின் நிலையை 6 பிரதான பிரிவுகளின் கீழ் உள்ள 22 நுட்பமான அளவுகோல்களை வச்சு மதிப்பீடு செய்றாங்க. அந்த 22 அளவுகோல்கள் என்னென்ன தெரியுமா?
1. கல்வி சார்ந்த 4 அளவுகோல்கள்
பாடசாலை செல்லும் வயதில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, குடும்பத் தலைவரின் குறைந்த கல்வித் தகுதி, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாத நிலை மற்றும் பிள்ளைகள் பாதியிலேயே கல்வியைக் கைவிடுதல்.
2. சுகாதாரம் சார்ந்த 4 அளவுகோல்கள்
குடும்பத்தில் நாட்பட்ட நோயாளிகள் அல்லது மாற்றுத்திறனாளிகள் இருப்பது, மருத்துவமனை வசதிகளை எளிதில் அணுக முடியாத சிரமம், பிள்ளைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தொடர்ச்சியான மருத்துவச் செலவுகளால் ஏற்படும் கடுமையான நிதிச்சுமை.
3. வீட்டு நிலைமை சார்ந்த 4 அளவுகோல்கள்
தற்காலிக அல்லது பாதுகாப்பற்ற வீடுகள், ஒரே அறையில் அதிகமானோர் வசிக்கும் நெருக்கடி நிலை, வீட்டின் சுவர், கூரை மற்றும் தரையின் தரம் குறைந்திருப்பது மற்றும் வீட்டின் உரிமையியல் நிலை (வாடகை வீடு அல்லது சட்டப்பூர்வ அத்தாட்சியற்ற நிலத்தில் வசிப்பது)
4. சொத்துக்கள் சார்ந்த 4 அளவுகோல்கள்
வருமானம் ஈட்டுவதற்கான கருவிகள் அல்லது நிலம் இல்லாமை, கால்நடைகள் அல்லது விவசாய உபகரணங்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்கள் (TV, Fridge போன்றவை) மற்றும் வாகனப் பயன்பாடு (மோட்டார் பைக், கார் போன்றவை).
5. குடும்ப அமைப்பு சார்ந்த 4 அளவுகோல்கள்
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இருப்பது, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், ஆதரவற்ற அல்லது பெற்றோரற்ற சிறுவர்கள் இருப்பது மற்றும் குடும்பத்தில் உழைப்போர்-தங்கியிருப்போர் விகிதம் (உழைப்பவரை விடச் சார்ந்திருப்போர் அதிகமாக இருப்பது).
6. வருமானம் & பொருளாதாரம் சார்ந்த 2 அளவுகோல்கள்
நிலையான வேலை இல்லாத நிலை அல்லது நீண்டகால வேலையின்மை மற்றும் குடும்பத்தின் மொத்த மாதாந்த வருமான அளவீடு.
நீங்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மை
அஸ்வெசும என்பது வறுமையை முற்றிலுமாக ஒழிக்கும் நிரந்தர சம்பளம் அல்ல! இது வறுமையில் உள்ள மக்களைக் கைதூக்கி விடும் ஒரு தற்காலிக ஊன்றுகோல் மட்டுமே. ஏற்கனவே இடைநிலை மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான கொடுப்பனவுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வருகின்றன.
அஸ்வெசும திட்டம் நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகளை வழங்குகிறது
தீவிர ஏழைகள் : மிகக் கடுமையான வறுமையில் உள்ள குடும்பங்கள்.
ஏழைகள் : அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிரமப்படும் குடும்பங்கள்.
பாதிக்கப்படக்கூடியவர்கள் : திடீர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்.
இடைநிலைப் பிரிவினர் : தற்காலிகமாக நிதி உதவி தேவைப்படும் குடும்பங்கள்.
இவற்றுடன் கூடுதலாக, குடும்பத்தில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பு மாதாந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன
மேல்முறையீடு மற்றும் புகார்கள்
உங்களுக்கு நியாயமாக அஸ்வெசும கிடைக்க வேண்டும் என்ற தகுதி இருந்தும் பெயர் விடுபட்டிருந்தால் அல்லது தவறுதலாகப் பட்டியல் நீக்கப்பட்டிருந்தால், உங்கள் பிரதேச செயலகத்தில் முறையான மேல்முறையீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்க முடியும். அல்லது 1924 என்ற கட்டணமில்லா உதவி இலக்கத்தைத் தொடர்புகொண்டு உங்கள் விவரங்களைச் சரிபார்க்கலாம்.
தகவல்களைத் துல்லியமாக வழங்குங்கள்
அஸ்வெசும கள ஆய்வாளர்கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, உங்கள் குடும்பத்தின் உண்மையான நிலையையும் இந்த 22 அளவுகோல்களையும் சரியாகத் தெரியப்படுத்துங்கள். தவறான தகவல்களை வழங்கினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தத் தகவல் அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கும், பயனாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள

Post a Comment