மக்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

மக்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் 


மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுகந் வசந்த டீ சில்வா தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீடு முறைமையை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களையும் எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கிணங்க மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7% பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் இல்லாமல் ஒரு வழமான நாட்டை உருவாக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் அழகான வாழ்க்கையை அடைய சமத்துவம் மற்றும் நியாயமான இடம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் மாற்றுத் திறனாளிகளுக்குக்கான தேசிய கொள்கை மற்றும் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post