அஸ்வெசும 1ம், 2ம் கட்ட மேன்முறையீடு செய்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு
அஸ்வெசும 1ம் கட்ட கொடுப்பனவுகள் பலரால் வாங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அஸ்வெசும 2ம் கட்டத்திற்கு விண்ணப்பித்தவர்ளின் பெயர்ப் பட்டியலும் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
அதாவது, ஜூலை மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. மேன்முறையீடுகள் செய்தவர்கள் தங்கள் முறையீட்டில் “1ம் கட்டம் பெற தகுதி இருந்தும் எங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட்டவில்லை, நாங்கள் தகுதி உடையவர்கள்,மிகவும் வறுமையான குடும்பத்தில் வாழ்கின்றவர்கள், வேறு வருமானம் இல்லை” இவ்வாறு சமர்ப்பித்திருந்தனர்.
தற்போது 1ம் கட்டத்தினுடைய மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. அதாவது, கிராம மட்டத்தில் பல இடங்களில் இது தொடர்பான பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.
கணிப்பீட்டின்படி, 1ம், 2ம் கட்ட பரிசீலனை முடிவடைந்ததன் பிற்பாடே தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு 2 கட்டத்திற்கும் ஒன்றாக பணம் வைப்பிலிடவே அரசாங்கம் எத்தனிக்கும்.
தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டதன் பின் ஆகஸ்ட் 25ம் திகதிக்குள் அல்லது 25ம் திகதிக்குப் பிற்பட்ட காலத்தில் தான் பணம் வைப்பிலிடப்படும். ஆகவே போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.
Post a Comment