அஸ்வெசும 2ம் கட்ட கொடுப்பனவு தேதி & வங்கிக் கணக்கு திறப்பு அறிவிப்பு 2025
அஸ்வெசும 2ம் கட்டத்திற்கு தெரிவாகி எப்போது கொடுப்பனவு கிடைக்கும் என்பதே இப்போது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது 7ம் மாதத்தின் இறுதிக் கட்டத்தில் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படப் போகின்றதென்று, ஆனால் அதுவும் தாமதப்படுத்தப்படும். ஏனென்றால் 2ம் கட்டத்திற்கான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது.
எனவே தான் இதனை பரீசிலனை செய்வதற்கு காலம் தேவைப்படுகின்றது. இதில் தகுதியானவர்களை தெரிவு செய்து ஒரே தடவையில் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பதையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அனைவருக்கும் இருக்கக்கூடிய மற்றுமொரு பிரச்சினை தான் வங்கிக் கணக்கு திறப்பது “நாங்கள் தெரிவாகி விட்டோம் இன்னும் வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதம் வழங்கப்படவில்லை” என்று அதிகானமானவர்களால் வினவப்பட்டது. இதற்கு காரணமும் காலம் நீடிக்கப்பட்டதுதான். மேலும் தெரிவு செய்யப்படக் கூடியவர்களுக்கும் ஒரே தடவையிலேயே வேலைதிட்டங்களை மேற்கொள்வதற்கான காரணம் தான் காலம் இதற்காக தாமதப்படுத்தப்படுவதும். 8ம் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் இதற்கான கடிதம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
இதனை தங்களுடைய பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்துவர்கள். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக அறிவிப்பார்கள்.
அஸ்வெசுமவிற்கு என்று பிரத்தியேகமான ஒரு வங்கிக்கணக்கு திறப்பது என்பது தான் சிறப்பாக இருக்கும் அதனால் தங்களுடைய பிரதேச செயலகத்தில் கடிதத்தைப் பெற்று அஸ்வெசுமவிற்கு என்று ஒரு பிரத்தியேகமான வங்கிக்கணக்கு திறந்தால் எந்தவித சிக்கலும் இல்லாமல் வங்கிக் கணக்குகளில் பணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அஸ்வெசும பயனாளிகளின் பெயரிலேயே வங்கிக் கணக்குகள் திறப்பது சிறந்தது. அவர்களுக்கு இயலாத பட்சத்திலேயே வேறொருவரின் பெயரில் வங்கிக் கணக்கை மேற்கொள்ளலாம்.
மீளாய்வுகள் இடம்பெற்று அஸ்வெசும இல்லாதவர்களுக்கு கிடைக்கவும், இருப்பவர்களுக்கு இல்லாமல் போவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இது குறித்து முழு தகவல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்..👇👇
Post a Comment