Historic Job Cuts in Canada – 64,000 Positions Vacant in 2025
கனடாவின் வேலை வாய்ப்பு சந்தை ஜூலை மாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. இதில் நிகரவாக 40800 வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முழு நேர வேலைகளாகும். இந்த சரிவு 15 முதல் 24 வயதிற்குற்பட்ட இளம் கனேடியர்களை கடுமையாக பாதித்துள்ளது. அவர்களின் வேலையின்மை வீதம் 14.6 வீதமாக உயர்ந்துள்ளது.
இது 2019 செப்டம்பர்க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த இளைஞர் வேலையின்மையின்மை வீதமாகும்.
ஒட்டுமொத்த தேசிய வேலையின்மை வீதம் 6.9 வீதமாக சீராக உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் இந்தத் தரவை சந்தேகத்திற்கிடமின்றி பலவீனமானது என்று விபரித்துள்ளனர். இது செப்டம்பர் மாதம் கனடா வங்கி வெட்டு விகித குறிப்பை செய்வதற்கான வாய்ப்பை வலுப்படுத்துகிறது என்று கூறுகின்றன. இருப்பினும் வரவிருக்கும் பணவீக்கம் மற்றும் வேலைகள் இழப்புகள் வங்கியின் இறுதி முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த வேலை இழப்புகள் கட்டுமாணம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் குவிந்துள்ளன. அல்பேர்டா மற்றும் பிரிட்டீஸ் போன்ற மாவட்டங்கள் இதில் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகப் பார்க்கப்படுகின்றது.
கனடாவில் 64000 பொதுச்சேவை வேலைகளை குறைக்குமாறு ஒன்றியல் எக்கோணமிக் இன்ஸ்டிடியுட் என்ற பொருளாதார சிந்தனைக்குழு பெரடல் அரசங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தங்களின் வரவு செலவு திட்டத்திற்கு முந்திய அறிக்கையில் இந்த ஆட்குறைப்பு மூலம் ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் சேமிக்க முடியும் என்று எம். ஏ. ஐ குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜான் கிரிட்டியன் தனது ஆட்சிக்காலத்தில் பொது சேவையை 17 சதவீதத்தால் குறைத்ததை உதாரணமாகக் கொண்டு இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுகளிலிருந்து சுமார் 1 இலட்சம் ஊழியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆட்குறைப்பை நடைமுறைப்படுத்த தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டாம் என்றும் கனடா பல் மருத்துவ பராமரிப்புத் திட்டம் போன்ற புதிய திட்டங்களை ரத்துச செய்யவும், கனடா போஸ்டை தனியார் மயமாக்கவும் எம். ஏ. ஐ கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்தவும் எதிர்கால சந்ததியினர் மீதான நிதிச் சுமையை குறைக்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என எம்.ஏ. ஐ வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சுகாதாரத் துறையின் நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கில் முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாகாண அரசின் உத்தரவின் பேரில் மாகாண சுகாதார சேவைகள் அதிகார சபை மற்றும் நோய்க்கட்டுப்பாடு மையம் ஆகியவற்றில் பணியாற்றிய பெரும்பாலான நிர்வாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார நிர்வாகத்திற்காக செலவிடப்படும் நிதியை நோயாளர்களின் நேரடி பராமரிப்புகளுக்கு சேவைகளுக்கு பயன்படுத்துவதே இந்த நடவடிக்கைக்கு முக்கிய நோக்கம் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
டேவிட் ஏவியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நோயாளர்களின் சேவைகளை பாதிக்காது என்று பீ.எச்.எஸ்.ஏ உறுதியளித்தாலும் ஊழியர்களிடேயே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மறுஆய்வு நடவடிக்கைகள் மாகணத்தில் ஏனைய சுகாதார அதிகார சபைகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு வித பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Post a Comment