அஸ்வெசும இரண்டாம் கட்ட வங்கி கணக்கு திறப்பது எப்படி?
வங்கிகிக் கணக்கு திறப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு எந்தவித மேன்முறையீடோ, ஆட்சேபனையோ இல்லாதவர்கள் மட்டுமே இப்போது உங்கள் வங்கிக் கணக்குகளை திறந்து கொள்ள முடியும். அப்படி எந்த மேன்முறையீடோ, ஆட்சேபனையோ இல்லாதவர்கள் உங்களுடைய பிரதேச செயலகம் அல்லது உங்களுடைய GS ஐ தொடர்பு கொண்டு உங்களுடைய வங்கிக் கணக்கை திறந்து கொள்வது சம்பந்தமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரதேச செயலகத்தில் அஸ்வெசும அலுவலகத்திற்கு சென்று உங்களுடைய அடையாள அட்டையை கொடுத்து உங்களுக்கு வங்கிக் கணக்கை திறக்க முடியுமா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அப்படி உங்கள் வங்கிக் கணக்கு திறக்க முடியும் என்றால் உங்களுக்கு அதற்குரிய கடிதம் ஒன்று தருவார்கள். அந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அஸ்வெசும வங்கிக் கணக்கு திறக்க அனுமதிக்கப்பட்ட வங்கி ஒன்றில் உங்கள் வங்கிக் கணக்கை திறந்து கொள்ள முடியும்.
உதாரணமாக
- மக்கள் வங்கி ( People's Bank )
- இலங்கை வங்கி ( BOC )
- ஹற்றன் தேசிய வங்கி ( HNB )
கட்டாயம் உங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தைக் கொடுத்து உங்களுடைய வங்கிக் கணக்கை திறந்து கொள்ளுங்கள். வங்கிக் கணக்கு திறக்க பணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கை திறந்த பின்னர் உங்களுடைய வங்கிப் புத்தகத்தை பிரதி எடுத்து பிரதேச செயலகத்தில் அஸ்வெசுமவிற்குரிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கு உறுதி செய்யப்பட்டு அதன் மூலம் உங்களுக்கான அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்
Post a Comment