சவூதி அரேபியாவில் இடி மின்னல் தாக்கி தாயும் மகளும் பலி
சவூதி அரேபியாவின் ஆசீர் பிராந்தியத்தில் சுற்றுலாவிற்காக சென்ற போது திடீரென கோடை மழை பெய்துள்ளது. இதனால் மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்த போது சவூதியின் அல்குரையாத் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்கள். இறந்தவர்கள் இக்பால் பின் அப்துல் ஹாதீம் மற்றும் அவரது மகள் தியாரா உபைதுல்லாஹ் அல் சராறி என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து வெளியான வீடியோவை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிழிக் செய்து பார்வையிடவும்
</
சவூதி அரேபியாவில் தற்போது பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைவதன் ஆபத்துக்களை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அதற்கு பதிலாக ஒரு கட்டிடத்தில் அல்லது வாகனத்தில் தஞ்சம் அடைவதும் சிறந்ததாக நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்
இது குறித்து சவுதி அரேபியா ஊடகம் வெளியிட்ட தகவலை பார்வையிட
Post a Comment