அஸ்வெசும August மாத கொடுப்பனவு எப்போது? 2 ஆம் கட்ட வங்கிக் கணக்கு திறப்பு வழிமுறை..!
August மாதத்திற்கான கொடுப்பனவு வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருக்கின்றதா? எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2ஆம் கட்டத்திற்கான வங்கிக் கணக்கை கொடுப்பதற்கான வங்கிக் கணக்கை எப்போது திறக்க வேண்டும்?
8 ஆம் மாதத்திற்கான கொடுப்பனவு அஸ்வெசும கணக்கில் வைப்பிலிடப்படப்பட்டிருக்கிற தா? என்று பார்த்தால் ஏற்கனவே அஸ்வெசும கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும். 8 ஆம் மாதம் 6 ஆம் திகதி அஸ்வெசும கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது. வழமை போன்று உங்களுக்கு வங்கியில் இந்த இறுதிக் கிழமைக்குள் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கடந்த காலங்களை பார்க்கும் போது அனேகமாக 22 ஆம் திகதிக்கு பின்னராகத்தான் கொடுப்பனவுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதனால் உங்களுடைய அஸ்வெசும கணக்கில் கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி வைப்பிலிடப்பட்டிருக்கிறது என்றால் நிச்சயமாக இந்த மாத இறுதிக்குள் அந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் கொடுப்பனவு எப்போது எடுக்கலாம் என்ற கேள்வியை தவிர்க்கலாம். ஏனென்றால் இந்த மாத இறுதிக்குள் தான் அதை எடுத்துக் கொள்ள முடியும். என்ற விடயத்தை பல மாதங்களாக நாம் காண்கின்றோம். அஸ்வெசும கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டிருக்கிறது என்றால் அதை நிச்சயமாக நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இதைத் தொடர்ந்து அடுத்ததாக எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விடயம் தான் 2 ஆம் கட்டத்திற்கான கொடுப்பனவு முதலாவது கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக வங்கிக் கணக்கை திறக்க வேண்டும். வங்கிக் கணக்கு எப்போது திறக்க வேண்டும், அதற்கான கடிதம் எப்போது பெற வேண்டும்.என்பது தான் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது தொடர்பாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
மேன்முறையீடுகள் செய்திருப்பீர்கள் சிலர். அதன் மூலமாகவும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், எந்த வித ஆட்சேபனையும் தாக்கல் செய்யாத பயனாளிகள் தங்களுடைய வங்கிக் கணக்கை திறக்க முடியும். அஸ்வெசும இல்லை என்று நீங்கள் மேன்முறையீடு செய்திருக்கலாம் சிலவேளை நீங்கள் தெரிவாகி இருக்கலாம். அதைத் தொடர்ந்து எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லாத பயனாளர்கள் உங்களது வங்கிக்கணக்கை திறக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களது வங்கிக் கணக்கை திறப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் உங்களது பிரதேச செயலகங்களில் இருக்கக்கூடிய நலன்புரி நன்மைகள் சபையினுடைய கிளைக்கு சென்று உங்களுடைய அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு வங்கிக் கணக்கை திறப்பதற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள முடியும். அந்த கடிதத்தின் ஊடாக உங்கள் வங்கிக் கணக்கை திறக்க முடியும். இந்த முறை வங்கிக் கணக்கை திறப்பதற்கு அடையாள அட்டை மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது. 1ம் கட்டத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சில பேருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தேசிய அடையாள அட்டை முக்கியம் என்பது வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எந்த எந்த வங்கிகளில் உங்களுடைய அஸ்வெசும கணக்கை திறந்து கொள்ள முடியுமென்றால் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகளில் உங்களுக்கு இலகுவாக இருக்கக்கூடிய வங்கிகளில் உங்கள் கணக்குகளை திறந்து கொள்ள முடியும்.
இந்த அஸ்வெசும கணக்கை திறப்பதற்கு நீங்கள் ஆரம்ப வைப்புத்தொகை எதுவும் செய்யத் தேவையில்லை. பிரதேச செயலகத்தால் கிடைக்கப் பெற்ற கடிதம் மாத்திரமே போதுமானது. ஒரு பயனாளி தங்கள் பெயரில் வங்கிக் கணக்கை திறக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு join account திறந்து கொள்ளக் கூடிய ஒரு சந்தரப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நீங்கள் வங்கிக் கணக்கை திறந்ததன் பிறகு அந்த புத்தகத்தை பிரதி எடுத்து அதை தங்களுடைய பிரதேச செயலகத்தில் கொடுத்து அதை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் அந்த வங்கிக் கணக்கு இலக்கம் உறுதி செய்யப்படும். அதன் பிறகே கொடுப்பனவை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இதுவே வழிமுறையாகும்.
இது குறித்து முழு தகவல்களை அறிய கீழே உள்ள வீடியோ பதிவை பார்வையிடவும்
Post a Comment