14 வயது ஆப்கான் சிறுவன் விமான சக்கரப்பகுதியில் பயணம் செய்து உயிர் பிழைத்த அதிர்ச்சி சம்பவம்.
விமான டயர் பகுதியில் சிறுவன் பயணித்த அதிசயம்
ஆப்கானிஸ்தானில் காம்னார் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காபுளில் உள்ள ஹமிட் கசாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் டெல்லி இந்ரா காந்தி விமான நிலையத்தில் மதியம் 12 மணியளவில் தரையிரங்கியது. அப்போது விமானத்தில் டயர் பகுதியிலிருந்து சிறுவன் ஒருவன் சாதாரணமாக இறங்கி நடந்து சென்றுள்ளான். இதைப் பார்த்து அதிர்ந்து போன விமான நிறுவன ஊழியர்கள் அந்த சிறுவனைப் பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவன் ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகணத்தை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. எதற்காக இப்படி செய்தாய் என கேட்டதற்கு விமானத்தில் போக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாகவும் ஆனால் பண்ணமில்லை அதனால் இப்படி செய்ததாக கூறியுள்ளான் அந்த சிறுவன்.
காபுள் விமான நிலையத்துக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து விமானத்தின் லேண்டின் கியர் பகுதிக்குள் எப்படியோ ஏறி விட்டதாக சிறுவன் கூறினான். உண்மையில் ஈரான் செல்லவே நான் ஆசைப்பட்டேன் ஆனால் தவறுதலாக இந்தியா செல்லும் விமானத்தில் ஏறி விட்டேன் எனவும் அந்த சிறுவன் கூறினான். உடனே சிறுவன் பயணித்து வந்ததாக கூறிய லேண்டின் கியர் பகுதியை அதிகாரிகள் சோதனை செய்தனர். சிறுவன் தன்னோடு எடுத்து வந்திருந்த சிறிய சிவப்பு நிற டேப் கோப்டரும் கிடைத்து. அவன் செய்தது தவறு என்றாலும் கூட 14 வயது சிறுவன் என்பதால் சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது.
எனவே அதே விமானம் மீண்டும் காபுள் கிளம்பிய போது டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அதில் அவனை ஏற்றி ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுவாக விமானங்கள் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கின்றன. அங்கு வெப்பநிலை சுமார் மைனஸ் ஐம்பது டிங்ரி செலசியஸ் ஆக இருக்கும். விமானத்தின் உட்பகுதியை போல சக்கரப் பகுதியில் பயணிக்கும் ஒருவருக்கு போதுமான ஒக்சிஜன் கிடைக்காது. இதனால் உயிர் பிழைப்பது கடினம். விமானம் தரையிரங்கும் போது கீழே விழுந்து காயப்படும் அபாயம் அதிகம் இது போன்ற காரணங்களால் விமானத்தின் சக்கர பகுதியில் மறைந்து பயணிப்பவர்களின் இறப்பு வீதம் 77% மாக உள்ளது.
இப்படி ஆபத்துக்கள் நிறைந்த லேண்டின் கியர் பகுதியில் சிறுவன் அசால்டாக 2 மணி நேரம் பயணித்த பிறகும் உயிர் பிழைத்த சம்பவத்தை விமான ஊழியர்கள் அதிசயமாக பார்க்கின்றனர். காபுள் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளில் அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளதையே இந்த சம்பவம் காட்டுவதாக உள்ளது.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.
Post a Comment