வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பு உரிமை: அரசாங்கம் புதிய நடவடிக்கை அறிவிப்பு
வெளிநாட்டு வாழ் இலங்கைர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.
வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கக் கூடிய விதத்தில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறார்கள்.
இலங்கை அரசியலமைப்பின் படி வாக்களிக்கக் கூடிய உரிமை என்பது தற்போது இலங்கையில் வசிக்கக் கூடிய மற்றும் தேர்தல் சட்டத்தின் படி வாக்காளர் பதிவில் பெயர் பதிவு செய்திருக்கக் கூடிய பிரஜைகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கும் தேர்தல் சட்டத்தின் படி வெளிநாட்டில் வாழக் கூடிய பிரஜைகள் அவர்கள் வாக்களிப்பதற்கான எந்த வித ஏற்பாடுகளுமோ,சட்டங்களுமோ இது வரைக்கும் இல்லை.
ஆகவே இப்படி இருக்கக்கூடிய இந்த நிலையில் தான் தற்போது வெளிநாட்டிலிருக்கும் இலங்கை வாழ் பிரஜைகளுக்கு தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்கும் வகையில் இருக்கும் சட்டங்களை திருத்துவதற்கும், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் விபரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பல ஆசிய நாடுகளில் இவ்வாறான சட்டம் காணப்படுகின்றது.
ஆனால் இலங்கையைப் பொருத்த வரையில் இதுவரை காலமும் அப்படி ஒரு சட்டம் கிடையாது. தற்போது இருக்கக் கூடிய நிலைமையில் இலங்கையில் சட்டங்களை மாற்றுவது என்பது காலத்தின் தேவையாகவே இருக்கிறது.அதனடிப்படையில் தான் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் இது தொடர்பிலே நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
குறிப்பாக தேர்தல் ஆணையம், வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா துறை அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சு அடங்கிய குழுவைத்தான் நியமிக்க இருக்கிறார்கள். இந்த குழுவினுடையை வேலை என்னவெனில், சட்டங்களை உருவாக்குவதற்கு தேவையான புதிய மற்றும் சட்ட அமைப்புங்களுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாகவே இலங்கையின் அரசியலமைப்பிலே பாரியளவு மாற்றங்கள் மற்றும் பல அதிரடியான திருப்பங்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.

Post a Comment