அஸ்வெசும இரண்டாம் கட்டம் தெரிவானவர்கள் ஸ்டேட்டஸ் கோட் Error Codes – முழுமையான விளக்கம் (Tamil)

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தெரிவானவர்கள் ஸ்டேட்டஸ் கோட் தொடர்பான முழுமையான விளக்கம் இதோ

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தெரிவானவர்கள் ஸ்டேட்டஸ் கோட் Error Codes – முழுமையான விளக்கம் (Tamil)

செலெக்டட் பிரிவில் (Selected Category) நீங்க இருக்கிறீங்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  1. நீங்கள் Selected ஆக இருந்தால் தான் status-இல் வரும் Error Code-ஐ பார்த்து அதற்கான தீர்வை அறியலாம்.
  2. நீங்கள் Not Selected என்றால், பெரும்பாலும் Open Account அல்லது No Bank Detail Found என்று வரும்.

Error Codes மற்றும் அதன் அர்த்தம்

#1 : கொடுப்பனவை வழங்குவதற்கான பெயர் விபரம் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

#2  :    வங்கிக்கு அனுப்பிய பெயர் விபரம் திரும்பியுள்ளது (Account பிரச்சினை இருக்கலாம்).

#3   :     உங்களுடைய பெயரில் ஆட்சேபனை/மேன்முறையீடு இருப்பதால் கொடுப்பனவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

#4     :     உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் வேறு ஒருவரின் N.I.C-க்கு பொருந்துவதால் நிறுத்தப்பட்டுள்ளது.

#5    :     குடும்ப உறுப்பினர் N.I.C வேறு ஒருவரின் N.I.C-க்கு பொருந்தியதால் நிறுத்தப்பட்டுள்ளது.

#6   உங்களுடைய வங்கிக் கணக்கு இலக்கம் வேறு ஒருவருடன் பொருந்தியதால் நிறுத்தப்பட்டுள்ளது.

#7   :    விண்ணப்பத்தில் கொடுத்த N.I.C மற்றும் வங்கியில் உள்ள N.I.C பொருந்தவில்லை.

#8         :        குடும்ப உறுப்பினரின் மரணம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

#9        :    மாவட்ட/தெரிவு பிரிவு சிக்கல்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

#10        :   மதஸ்தாபன துறவிகளுக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.

#11  : வங்கிக் கணக்குப் பெயரில் விசேஷ குறியீடுகள் இருப்பதால் நிறுத்தப்பட்டுள்ளது.

மற்றும் பிற Status விளக்கங்கள்

  1. N/A – உங்களுடைய (Account verified) ஆகிவிட்டது. பிரச்சினை இல்லை என்று அர்த்தம். 
  2. Open Account – வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது. Verification ஆகும்போது N/A-ஆக மாறும்.
  3. Rejected / Invalid – N.I.C எண் அல்லது வங்கிக் கணக்கில் உள்ள விபரங்களில் பொருந்தாமை இருந்தால் வரும்.
  4. Bank Details Not Found – சில வாரங்களில் சரியாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விடயம்.

  1. முதலில் நீங்கள் Selected ஆ? Not Selected ஆ? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

  2. Selected ஆனால் மட்டுமே status code-ஐ பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

  3. Open Account → Verified → N/A என்ற நிலை மாறும்.

  4. Rejected/Invalid என்றால் விபரங்களைச் சரி பார்த்து வங்கி/அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும் இது தொடர்பான விளக்கம் உங்களுக்கு தேவை என்றால் இது தொடர்பான முழு விளக்கம் வீடியோ பதிவு மூலம் வழங்கப்பட்டுள்ளது.  அதனை நீங்கள் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான முழு விளக்கங்களை அறிந்து கொள்ள முடியும். 
  • வீடியோ பதிவை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்: Click Here 

Post a Comment

Previous Post Next Post