SaReGaMaPa Season 5 Iniya Gets Emotional After Judges’ Comments | Viral Video

சரிகமபவில் இனியாவை உணர்ச்சிவசப்படுத்திய நடுவர்கள்! சரிகமப மேடையில் நடந்தது என்ன? 

SaReGaMaPa Season 5 Iniya Gets Emotional After Judges’ Comments | Viral Video

சரிகமப சீனியர் சீசன் 5 இல் நடந்த பஞ்சபூத சுற்றில் போட்டியாளர் இனியாவை நடுவர்கள் (Judges) மிகவும் உற்சாகப்படுத்தியதால் அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுதிருக்கார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பெறும் வைரலாகியுள்ளது.

இனியா நடிகை தேவயானி மற்றும் இயக்குனர் ராஜகுமாரனின் மகளாக போட்டியில் கலந்து கொண்டதால் ஆரம்பத்திலிருந்தே அவரைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. சிலர் “சினிமா பின்னணியின் காரணமாகவே இவர் முன்னேறுகிறார்” என்று கூறியுள்ளனர். அதே சமயம்இ பவித்ரா, செந்தமிழ் போன்ற பிற போட்டியாளர்கள் கடின உழைப்பின் மூலம் வந்ததாக ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது பெறும் பேசு பொருளாக இருந்தபோதிலும் எதனையும் பொருட்பெடுக்காது இனியா தன்னுடைய தனி முயற்சியை சரிகமப மேடையில் வெளிப்படுத்திக்கொண்டிருகிறார்.

ஆனால் சமீபத்திய எபிசோடில் இனியா தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டு “எனது பெற்றோரின் ஆதரவினால் தான் இன்று இங்கே இருக்கிறேன். ஆனால் என் திறமையால்தான் மேடையில் நிற்கிறேன்” என்று சொல்லியுள்ளார். இதை கேட்டு அவர் அழத் தொடங்கிய தருணத்தில் நடுவர்களும் அவருக்கு உற்சாகமூட்டி அவருடைய விடாமுயற்ச்சியை பாராட்டியும் உள்ளனர்.

அம்மா தேவயானி அடிக்கடி “நீ பாடலுக்கே கவனம் செலுத்து உன்னால் உயர்ந்த இடம் அடைய முடியும்” என்று ஊக்கம் அளிப்பதாகவும் அதுவே தன்னைக் காப்பாற்றியதாகவும் இனியா கூறியுள்ளார்.

இப்போது இனியாவுக்கு எதிராக வந்த விமர்சனங்களைக் காட்டிலும் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அவர் இறுதிப்போட்டிக்கு செல்வாரா? பட்டத்தை வெல்வாரா? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் “நடிகையின் மகள்” என்ற அடையாளத்தை தாண்டி “சரிகமப இனியா” என்ற பெயரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 

இந்த உணர்ச்சிபூர்வமான சம்பவம் கடைசியாக நடைபெற்ற சரிகமப போட்டியில் இடம்பெற்றுள்ளது. இந்த கானொளியை நீங்கள் பார்வையிட வேண்டுமானால் கீழே உள்ள லிங்கை கிழிக் செய்யவும்.

  • வீடியோ பதிவு :  Click Here 

Post a Comment

Previous Post Next Post