சரிகமப சீனியர் சீசன் 5 – முதல் பைனலிஸ்ட் ஆன சபேசன்! மேடையில் அதிரடியாக அறிவித்த நடுவர்கள்.
Saregampapa Seniors Season 5 Sabesan First Finalist Announced
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பெரும் பைனல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே முதல் பைனலிஸ்ட் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அந்த ஆவலை உடைக்கும் செய்தி என்னவெனில் – சபேசன் அவர்கள் தான் முதல் பைனலிஸ்ட் ஆக தேர்வாகியுள்ளார். என்பதனை சரிகமப மேடையில் நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். இது சபேசன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சபேசன் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்?
சாதாரணமாக டிக்கெட் டு பைனல் (Ticket to Final) ரவுண்ட் வந்த பிறகே யார் பைனலுக்கு செல்லப் போகிறார்கள் என்பது அறிவிக்கப்படும். ஆனால் இந்த சீசனில் சிறிய மாற்றம் நடந்துள்ளது. ஜட்ஜ்கள் வழங்கிய மதிப்பெண்கள் கோல்டன் பெர்ஃபார்மன்ஸ்கள் மற்றும் ஒட்டுமொத்த பாடல் திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர் நேரடியாக பைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்கிற புதிய விதிமுறையின் மூலம் சபேசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதில் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து சிறப்பாக பாடி வந்த சபேசன் எப்போதும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று பல கோல்டன் பெர்ஃபார்மன்ஸ்களை பெற்றதால் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சபேசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சபேசன் ஒவ்வொரு வாரமும் தனித்துவமான பாடல் தேர்வு செய்து பாடுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவர் பாடும் பாடல்களுக்கு எப்போதுமே மேடையே முழுவதும் கைதட்டலால் முழங்கும். இதனால் டைட்டில் வின்னராகவும் அவர் அதிக வாய்ப்புகள் உள்ளவராக கருதப்படுகிறார்.
மற்ற போட்டியாளர்கள்
இன்னும் நான்கு இடங்கள் காலியாக உள்ளன. அடுத்ததாக சுசாந்திகா பைனலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். மீதமுள்ள மூன்று இடங்களுக்கு இனியாஇ பவித்ராஇ செந்தமிழ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் தனித்துவமான குரல் பாடல் தேர்வுஇ மற்றும் மேடை நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துவருகிறார்கள். அடுத்து நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- Saregampapa Sabesan Announced Video Link : Click Here
முடிவுரை
சரிகமப சீனியர் சீசன் 5 இறுதி சுற்று மிகுந்த ஆவலுடன் காத்திருக்கப்படுகிறது. முதல் பைனலிஸ்டாக சபேசன் தேர்வாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் இறுதியில் யார் டைட்டில் வின்னர் ஆகிறார் என்பதை நேரமே தீர்மானிக்க வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம் யார் டைடில் விண்ணர் என்று.
Post a Comment