ஒலுவில் – களியோடை ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய் – தந்தை கைது வெளியான அதிர்ச்சி தகவல்.
ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தையின் பெற்றோரைஇ அக்கரைப்பற்று பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள் யார்?
குழந்தையின் தந்தை ஒலுவிலைச் சேர்ந்தவர், தாய் நிந்தவூரைச் சேர்ந்தவர் எனவும், இருவரும் 17 வயதினர் என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் திருமணமாகாத நிலையிலேயே இந்தக் குழந்தை பிறந்ததாக விசாரணைகளில் வெளிச்சம் பெற்றுள்ளது.
இதன் பின்னணி விவரம்
இருவரும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
பின்னர் குழந்தையின் தந்தை காதலியின் வீட்டிற்கு சென்று
“இந்தக் குழந்தையை நான் வளர்க்கிறேன்” என்று கூறி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையை எப்படி கைவிட்டார்கள்?
அதன் பின் தந்தை தனது சின்னம்மாவை தொடர்பு கொண்டுஇ
“களியோடை ஆற்றுப் பகுதியில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தேன். உங்களுக்கு குழந்தை இல்லையே இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா?” என்று கேட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சின்னம்மாவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் குழந்தையை அங்கு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் நடவடிக்கை
இச்சம்பவம் தொடர்பான செய்தி வேகமாகப் பரவிய நிலையில், அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த தகவல் இலங்கை முழுவதும் பெறும் பேசுபொருளாக அமைந்துள்ளது.
Post a Comment