Why Aswesuma Payments Are Delayed – Latest Update on Phase 2 Beneficiaries

அஸ்வெசும கொடுப்பனவு தாமதம் – ஏன் இன்னும் பணம் வங்கிக் கணக்கில் வரவில்லை?

"Aswesuma payment delay in Sri Lanka – Phase 2 beneficiaries waiting for welfare funds in bank accounts"

அஸ்வெசும கொடுப்பனவு ஏன் இன்னும் கொடுக்கப்படவில்லை? என்பதே அனைவரினதும் கேள்வி

இதுவரையும் உறுதிப்படுத்தப்பட்ட தகவவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. டீ.எஸ் அலுவலகத்தில் இருக்கக்கூடிய அதாவது அங்கு வேலைபார்க்கக் கூடியவர்களிடம் கேட்டு எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த செப்டம்பர்   மாதம் 20 ஆம் திகதிக்குள் 2 ஆம் கட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு பணம் வைப்பிலிடப்படும். என்று கூறினார்கள். ஆனால் 20 திகதி கடந்து விட்டது. ஆனால் இன்னுமே 2 ஆம் கட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பணம் வரவு வைக்கப்படவேயில்லை. அதற்கான தாமதம் எதற்காக என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நிறைய பேர் கேட்டு இருந்தீர்கள்  எனது கணவருக்கு கால் இயலாமையினால் எனது கணக்குப் புத்தகத்தை கொடுத்து இருக்கிறேன். இப்படிஎல்லாம் கேட்டு இருந்தீர்கள். நீங்கள் அஸ்வெசும அலுவலகத்திற்கு சென்று உங்களது கிவ். ஆர். கோட் , தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும்  கொடுத்தவுடன்  ஒரு விண்ணப்பம் தரப்படும் அதை கொண்டு போய் வங்கியில் கொடுத்தால் உங்களுடைய கணக்கு இலக்கத்தை திறந்து கொள்ளக் கூடியாதாக இருக்கும் அது குறிப்பிட்ட காலப்பகுதியில்  மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்திருக்கும் அதைத் தவறியவர்கள் உங்கள் பிரதேச செயலகத்தில் சென்று கேட்டுக் கொள்ளுங்கள். 

மேலும் கேட்டிருந்தீர்கள் நான் வெளிநாடு சென்று விட்டேன் எனக்கு அஸ்வெசும கிடைக்குமா என்று ? நீங்கள் கணக்கு இலக்கம் வைத்து இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி ஒரு கடிதம் கொடுத்திருக்க வேண்டும். அது உறுதிப்படுத்திருந்தால் மாத்திரமே  உங்களது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் என்பது கேள்விக் குறிதான். 

அடுத்து 2ஆம் கட்டத்திற்கு ஏன் கணக்கு வைப்பிலிடப்படவில்லை என்பது பலரது கேள்வியாக உள்ளது. 1ஆம் கட்டத்தில் மேன்முறையீடு செய்திருந்தவர்களுகான அந்த பணிகள் அதாவது மேன்முறையீடுகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்  இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தோம். அதே போல தான் 2ஆம் கட்டத்தில் செய்யப்பட்ட மேன்முறையீடுகளும் பரிசீலிலிக்கப்படும். ஆனால் கால அவகாசம் தேவைப்படும்.

பொதுவாக  இப்போது இருக்கக்கூடிய அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஒரு கொள்கை ஒரு கோட்பாடுக்கு கீழே தங்களுடைய வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள். ஒரு விடயம் செய்யப் போனால் அது எல்லோரிடமும் போய் சேர வேண்டும், நியாயமான முறையில்  போய் சேர வேண்டும். அதில் கவனமாக இருக்கின்றனர். மேலும் ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் போது அது அத்தியவசியமாக யாருக்கு கிடைக்க வேண்டும். எனபதில் கவனமாக இருக்கிறார்கள்.எல்லா வேலைத்திட்டங்களும் இப்படித்தான். மக்களின் சிரமங்கள் இதில் கணக்கெடுக்கப்படும். 

வட கிழக்கு மற்றும் இன்னும் சில இடங்களிற்கு அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது. ஒரு சாராருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரு சாரருக்கு கிடைக்கப் பெறவில்லை. இதற்கு காரணம் நலன்புரி நன்மைகள் சபை ஊடாக உங்களுடைய பிரதேச செயலகத்திற்கு தான் அந்த பணம் வரவு வைக்கப்படுகிறது.

அதாவது இலங்கையில் இருக்கக்கூடிய மக்களில் எந்த இடத்தில் இருக்கக்கூடிய மக்கள் ரொம்பவே வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிறார்கள், எங்கு இருக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சரி நிறந்தரமான ஒரு பொருளாதார ரீதியான ஒரு விடயத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது இப்படி சிரமப்படக் கூடிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களைத்தான் தெரிவுசெய்கின்றர். பணம் ஏல்லோருக்கும் கிடைக்கும் ஆனால் முன்னுரிமை பெற்றவர்கள் யார் என்றால் மிகவும் பின் தங்கிய கிராம மக்களுக்கே. அப்படியான பிரதேச செயல்கங்களுக்கே நலன்புரி நன்மைகள் சபையினால் பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்


Post a Comment

Previous Post Next Post