அஸ்வெசும பயனாளிகளில் 2 வகையினருக்கு நிதியுதவி! – வெளியான புதிய அறிவிப்பு 2025
இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னோடி முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச செயலகங்களிலும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வறுமை மற்றும் தீவிர வறுமை குடும்பங்களுக்கு 150,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முன்னோடி வேலைத்திட்டத்தின் மூலம் 2025 முதல் 2027 வரை 143 பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் 839 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து 23,775 பேர் வரை பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலர் தற்போது “மீளாய்வு எப்போது?”, “நாங்களும் பெற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையாகவே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களும் தகுதி பெற்றவர்களாக இருப்பின், அவர்களும் விரைவில் அஸ்வெசும நன்மைகள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்து மேலதிக தகல்களை அறிந்து கொள்ளவேண்டம் என்றால் கிழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்து முழுமையாக பார்வையிட முடியும்.
முழு வீடியோவை பார்வையிட: Click Here
Post a Comment