அஸ்வெசும 2ஆம் கட்ட கொடுப்பனவு – வங்கிக் கணக்கில் வெளியானதா? மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்.
அஸ்வெசும 2ஆம் கட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவு தற்போது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மிக வறுமைக் கோட்டிற்குட்பட்ட பயனாளர்களுக்குரிய பாதிக் கொடுப்பனவு இன்று அல்லது நாளை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்ற மகிழ்ச்சி தகவலை கூறிக்கொள்கின்றோம்.
- நீங்கள் கொடுத்த வங்கிக் கணக்கு சரியானதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
- எந்தவித ஆட்சேபனை ஃ மேன்முறையீடு இல்லாத பயனாளிகளுக்கே இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
1ஆம் கட்ட Pending கொடுப்பனவு வெளியானதா?
அஸ்வெசும 1ஆம் கட்டத்தில்இ ஜூன் 21ஆம் தேதி கணக்கில் வைப்பிலிடப்பட்ட ஒரு கொடுப்பனவு பலருக்கும் கிடைக்காமல் இருந்தது.
- அந்த Pending amount செப்டம்பர் 29ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இறுதியாக சேர்க்கப்பட்டு முழுமையாக அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
2ஆம் கட்ட மீளாய்வு எப்போது?
- அக்டோபர் 4ஆம் தேதி முதல் 17 நாட்களுக்குள் அஸ்வெசும தொடர்பான ஆட்சேபனை மற்றும் மேன்முறையீடுகள் தொடர்பான மீளாய்வு நடைபெற உள்ளது.
- ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் வேறு வேறு தேதிகளில் இது நடைபெறும்.
- தகுதி பெற்றவர்கள் நவம்பர் மாதம் முதல் தங்களுக்குரிய கொடுப்பனவுகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டியது:
காலம் தாமதமாகினாலும்இ உங்களுக்குரிய கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்படும்.
கொடுப்பனவுவை Online இல் Check செய்தால் ஏன் தெரியவில்லை?
பலர் இணையத்தில் தங்கள் அஸ்வெசும கணக்கை Check செய்தபோது வைப்புத் தொகை தெரியவில்லை.
- இதற்குக் காரணம் System update தாமதம் தான்.
- தொகை ஏற்கனவே உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும்.
- சற்று காலம் சென்ற Online System-இலும் அது update ஆகும்.
என்கின்ற தகவலை உங்களுக்கு கூறிக்கொள்கினறோம். எனவே இரண்டாம் கட்டம் விண்ணப்பித்து தெரிவானவர்களுக்கான கொடுப்பனவை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான முழு விளக்கத்தை நீங்கள் அறிய வேண்டுமானால் இது தொடர்பான முழு விளக்கம் உங்களுக்கு வீடியோவாக வளங்கப்பட்டுள்ளது.
வீடியோவை பார்வையிட : Click Here
Post a Comment