அஸ்வெசும கொடுப்பனவு பெறுகின்ற கடுமையான வறுமை கோட்டினுள் இருக்கின்வர்களுக்கு 1,50,000 நிதியுதவி மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற வறுமை மற்றும் தீவிர வறுமை குடும்பங்களை வலுவூட்டும் புதிய நிகழ்ச்சித் திட்டம் குறித்து முக்கிய விடயம்.
இலங்கை அரசாங்கம் தற்போது அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் வறுமை மற்றும் தீவிர வறுமை நிலைகளில் உள்ள சமூகக் குழுக்களை வலுவூட்டும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 12 இலட்சம் குடும்பங்கள் இந்த நலன்புரி திட்டத்தின் பயன்களைப் பெறவிருக்கின்றமை முக்கியமானதும் அவசியமானதுமான விடயம்.
இந்த திட்டத்தின் செயல்பாட்டுப் பொறுப்பு சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி (World Bank) ஆகியவற்றின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறமை முக்கிய அம்சமக கருதப்படுகிறது.
வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி முயற்சிகள்
இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு முன்னோடி கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு வறுமை மற்றும் தீவிர வறுமைக் குடும்பத்திற்கும், அவர்களின் வியாபாரம் அல்லது தொழில் திட்டத்தின் அடிப்படையில், அதிகபட்சமாக ரூ.150,000 வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இதற்காக, பயனாளிகளுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். என்ற பல முக்கியமான விடயங்கள் இதில் அடங்கியுள்ளன.
2025 முதல் 2027 வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்
அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற பெரிய திட்டம்
இந்த முக்கியமான திட்டம் குறித்து கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வறுமை நிலையை குறைத்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது.
நலன்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்
அஸ்வெசும நலன்புரி வலுவூட்டல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால்,
- வறுமை குறையும்,
- மக்கள் தங்கள் சொந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்குவார்கள்,
- சுயதொழில் மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சி பெறும்,
- சமூக வலிமை மற்றும் நம்பிக்கை பெருகும்.
இது இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் உங்களுடைய சமுர்த்தி உத்த்யோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது தொடர்பான தகவல்களை இந்த இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
Post a Comment