அஸ்வெசும நலன்புரித் திட்டம் விரைவில் ரத்து – வறிய மக்களை குறி வைக்கும் அரசு? சஜித் பிரேமதாஸ வெளியிட்ட அதிர்ச்ச தகவல்.
இலங்கையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரித் திட்டம் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவர் இந்த தகவலை அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது வெளிப்படுத்தினார். “அஸ்வெசும திட்டம் மக்களின் வறுமையை குறைப்பதற்கு தோல்வியடைந்துள்ளது,” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
சஜீத் பிரேமதாஸ அவர்கள் மேலும் கூறியதாவது
“ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் என்பது வெறும் நிதி உதவியாக மட்டுமல்ல; அது வறுமை ஒழிப்பு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசு அதற்கு மாறாக நடந்து வருகிறது.”
இவ்வாறான ஒரு நிலைமையில், அரசு அஸ்வெசும நலன்புரி திட்டத்தை விரைவில் ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
அஸ்வெசும திட்டம் கடந்த மாதங்களில் இலங்கையின் வறிய குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக இருந்து வந்தது. குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இது ஒரு முக்கியமான உதவித் திட்டமாக அமைந்திருக்கிறது. இதனால் பல மக்கள் தங்களுடைய வாழ்கை செலவை கூட பார்க்கவேண்டியுள்ளது.
எனினும், எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு இந்த திட்டத்தை உண்மையிலேயே நிறுத்தவா போகிறது என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
மக்களின் நம்பிக்கை, அரசின் முடிவுகள் மற்றும் எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் - இவை மூன்றும் ஒன்றாக இணைந்து தற்போது இலங்கை அரசியல் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இருந்தபோதிலும் அரசு இது தொடர்பாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே யாரும் இது குறித்து அச்சமடைய தேவையில்லை.
இது தொடர்பான முழு தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிழிக் செய்யவும் : Click Here
Post a Comment