Pavithra’s Emotional Performance Stuns Singer Srinivas in Sa Re Ga Ma Pa Senior Season 5

பவித்ராவின் பாடலைக் கேட்ட ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி! சரிகமப மேடையில் உணர்ச்சி பொங்கிய தருணம் நீங்களே பாருங்கள் அதிர்ந்து போய்விடுவிங்க.

Pavithra performing on Sa Re Ga Ma Pa Senior Season 5 stage

இந்த வாரம் நடந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியிருந்தது. Top 5 சுற்று என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

அந்த நிலையில், பவித்ரா மேடைக்கு வந்து பாடிய பாடல் அனைவரையும் மெய்மறக்க வைத்தது. அவர் பாட ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள், நடுவர் ஸ்ரீநிவாஸ் அவர்களே அதிர்ச்சியுடன் எழுந்து, மேடைக்கு நெருக்கமாக சென்று நின்று பார்த்து கொண்டிருந்தாராம். அந்தளவுக்கு பவித்ராவின் பாடல் அமைந்துள்ளது.

பாடல் முடிந்தவுடன் ஸ்ரீநிவாஸ் அவர்கள் கூறியதாவது:

“பவித்ரா, உண்மையிலேயே இது உங்களுடைய சிறந்த performance! கடந்த இரண்டு வாரங்களாக உங்களுடைய முன்னேற்றம் அபாரமாக இருந்தது. கடந்த வாரம் flat performance என்று சொன்னேன், ஆனால் இந்த வாரம் நீங்க அதை முழுமையாக மாற்றிட்டீங்க. இதே மாதிரி தொடர்ந்தால் கண்டிப்பா Top 5-க்கு போவீங்க!” என்று பவித்திராவை வாழ்த்தியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல், அவர் பவித்ராவிற்கு ஆசீர்வாதமும் வழங்கியுள்ளார். அந்த தருணம் முழு அரங்கையும் உணர்ச்சியில் மூழ்க வைத்தது. ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் எல்லாருமே பவித்ராவின் பாடல் திறமைக்கு கைதட்டி பாராட்டியுள்ளனர்.

பவித்ரா இதுவரை அளித்த அனைத்து performance-களும் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், இந்த வார performance தான் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று கூறப்படுகிறது. இதனால், அவர் Top 5 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.  பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகுது என்று.

சரிகமப சீனியர் சீசன் 5 இன் இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பவித்ரா தனது திறமையால் அனைவரின் மனதையும் வென்று வருகிறார். இந்த முன்னேற்றத்திற்கு அவருக்கு வாழ்த்து சொல்லலாமே.

சரிகமப மேடையில் நடந்த இந்த உணர்ச்சிபூர்வமான வீடியோவை பார்வையிட : Click Here 


Post a Comment

Previous Post Next Post