ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவு அப்டேட்..! சிஸ்டத்தில் பெரிய மாற்றம் – அப்டேட் செய்யாதவர்கள் நீக்கம்..!

ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவு அப்டேட்..! சிஸ்டத்தில் பெரிய மாற்றம் – அப்டேட் செய்யாதவர்கள் நீக்கம்..!

ஜூன் 2026 அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சிஸ்டம் அப்டேட்கள், பயனாளிகள் நீக்கம், ஜூன் மாத பணம் கணக்கில் வரும் தேதி உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே.


அஸ்வெசும திட்ட பயனாளிகளுக்கு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவு மற்றும் புதிய சிஸ்டம் மாற்றங்கள் தற்போது மக்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறது.

தகவல்களின் படி, ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவு விவரங்கள் ஜூன் 3, 5 அல்லது 6ம் தேதிகளில் சிஸ்டத்தில் பதிவேற்றப்பட இருக்கிறது. அதன் பிறகு பணம் சரியாக கணக்கில் அப்டேட் ஆகியுள்ளதா என்பதை ஜூன் 8 அல்லது 9ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவை கிலிக் செய்து பாருங்கள் 👇👇👇

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் தகுதி பெற்ற அனைத்து பயனாளிகளுக்கும் இந்த மாத கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில், தகுதி பட்டியலை சீரமைக்கும் முக்கிய சிஸ்டம் அப்டேட்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.

கடந்த மே 30ம் தேதிக்குள் தங்களது தகவல்களை அப்டேட் செய்யாத முதலாம் கட்ட பயனாளிகள் இந்த ஜூன் மாதத்திலிருந்து சிஸ்டத்தில் இருந்து தானாகவே நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்காலிக பிரிவில் இருக்கும் பயனாளிகளுக்கான 6 மாத அவகாசமும் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்திலிருந்து அவர்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதற்குப் பிறகு அஸ்வெசும திட்டத்தில் “ஏழை” மற்றும் “மிகவும் ஏழை” என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே தொடர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே உங்கள் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா? ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதை உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர் உதவித்தொகை போன்றவை வழக்கம்போல் தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சிஸ்டம் மாற்றங்கள் காரணமாக அடுத்த மாதங்களில் பயனாளி பட்டியலில் பெரிய மாற்றங்கள் வரக்கூடும் என்பதால் மக்கள் தற்போது அதிக கவனத்துடன் தங்களது விவரங்களை சரிபார்த்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post