இஸ்ரேலில் ஆட்சி இடியுமா? – ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல்

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது.

மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

21 மாதங்களாக காசா உடனான போர் நடந்து வரும் சூழலில் இராணுவச் சேவை விலக்கு தொடர்பான இந்த விவாதம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. புதிய இராணுவச் சேவை சட்டமூலத்தினை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது

அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

ஷேஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.

இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நேதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேலிய நளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நெசெட்டில் 11 இடங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) நெசெட்டில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.

இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post